/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீராதாகிருஷ்ண கல்யாண உற்சவம் துவங்கியது
/
ஸ்ரீராதாகிருஷ்ண கல்யாண உற்சவம் துவங்கியது
ADDED : பிப் 04, 2024 02:04 AM

திருப்பூர்;திருப்பூர் ஓடக்காடு, ஸ்ரீராமகிருஷ்ண பஜனை மடத்தில், ஸ்ரீராதாகிருஷ்ண கல்யாண மகா உற்சவம் நேற்று துவங்கியது.
நேற்று காலை, 8:45 மணி முதல், மதியம், 1:00 வரை, பஜனை நடந்தது. தோடயம்களம் குரு கீர்த்தனைகள், ஸ்ரீகீதாகோவிந்தம் பஜனைகள் விமரிசையாக நடந்தது.
மாலை, 3:30 முதல், 6:30 மணி வரை, அஷ்டபதி, தரங்கம் எனப்படும், ஸ்ரீகீத கோவிந்தம் பஜனை, தாஸாதீ கீர்த்தனைகள், இரவு, 8:15 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இரவு, 9:15 முதல், 10:45 மணி வரை, சிறப்பு தியான கீர்த்தனை நடந்தது. தொடர்ந்து, இன்று நள்ளிரவு 1:30 மணி வரை, தீப பிரதட்சணம், திவ்ய நாம பஜனை நடக்கிறது. அதிகாலை, 3:00 மணி வரை, 'டோலோத்ஸவ' நிகழ்ச்சியும், காலை, 8:00 முதல், 9:00 மணி வரை, ஸம்பிரதாய உஞ்ச விருத்தியும் நடக்கிறது.
காலை, 9:30 மணி முதல், மதியம், 1:30 மணி வரை, ஸ்ரீராதா கிருஷ்ண கல்யாண மகா உற்சவம், ஸ்ரீஆஞ்சநேய உற்சவம், மகாதீபாராதனை நடக்கிறது.