/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசத்ய சாய்பாபா அவதார திருநாள் திருப்பூரில் கோலாகல கொண்டாட்டம்
/
ஸ்ரீசத்ய சாய்பாபா அவதார திருநாள் திருப்பூரில் கோலாகல கொண்டாட்டம்
ஸ்ரீசத்ய சாய்பாபா அவதார திருநாள் திருப்பூரில் கோலாகல கொண்டாட்டம்
ஸ்ரீசத்ய சாய்பாபா அவதார திருநாள் திருப்பூரில் கோலாகல கொண்டாட்டம்
ADDED : நவ 23, 2024 11:18 PM

திருப்பூர்: திருப்பூர், பி.என்., ரோட்டில் உள்ள ஸ்ரீசத்ய சாய் ஆன்மிக மையத்தில், 19ம் தேதி நாம சங்கீர்த்தனம், சாய் மந்திரில் உழவாரப்பணி ஆகியன நடந்தது. திருவிளக்கு பூஜையும், பாலவிகாஸ் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மகளிர் பங்கேற்ற சிறப்பு வழிபாடும் நடந்தது.
இளைஞர்கள் பங்கேற்ற சிறப்பு பஜன் மற்றும் சொற்பொழிவு ஆகியன நடந்தது; லிங்கராஜன் மற்றும் நாராயண மூர்த்தி ஆகியோர் பேசினர். தொடர்ந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஓம்காரம், நகர சங்கீர்த்தனம்; கணபதி ேஹாமம், பிரசாந்தி கொடியேற்றம் மற்றும் சாய் பஜன் நடைபெற்றது. காலை 11:00 மணி முதல் சிறப்பு நாராயண சேவையும், மாலை 4:45 மணிக்கு 1008 சகஸ்ர நாம பாராயணம்; ஸ்வாமி அழைப்பு, சாய் பஜன் மற்றும் சொற்பொழிவும், அதையடுத்து ஊஞ்சல் உற்சவம், மகா மங்கள ஆரத்தியும் நடைபெற்றது. இன்று (24ம் தேதி) காலை 9:00 மணிக்கு அகண்ட நாம பஜன் மற்றும் ரத்த தான முகாம் ஆகியன நடக்கிறது.