/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீசத்ய சாய் பக்தர்கள் ஏகாதச ருத்ர பாராயணம்
/
ஸ்ரீசத்ய சாய் பக்தர்கள் ஏகாதச ருத்ர பாராயணம்
ADDED : டிச 15, 2025 05:10 AM

திருப்பூர்: தமிழகம் முழுவதும் நேற்று ஸ்ரீசத்ய சாய் பக்தர்கள் ஒரே நேரத்தில் ஏகாதச ருத்ர பாராயணம் செய்தனர்.
ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஏகாதச ருத்ர பாராயணம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவ் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள ஸ்ரீ சத்ய சாய் விஹார்கள், பஜன் மண்டலிகள் உள்ள அனைத்து வழிபாட்டு மையங்களிலும் நேற்று காலை ஒரே நேரத்தில் இந்நிகழ்ச்சி நடந்தது. கணபதி பிரார்த்தனையுடன் துவங்கியது. தொடர்ந்து ருத்ரம் - நமகம் மற்றும் சமகம், அதையடுத்து ஸ்வஸ்தி மந்திரமும் தொடர்ந்து மகா மங்கள ஆரத்தியும் நடந்தன.திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள ஸ்ரீசத்ய சாய் விஹாரில், ஏகாதச ருத்ர பாராயணம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று காலை துவங்கிய இந்த பாராயணம் நிகழ்வு பிற்பகல் வரை தொடர்ந்து நடந்தது.

