/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் ஸ்ரீசரண் மருத்துவமனை 20 ஆண்டு சேவை
/
சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் ஸ்ரீசரண் மருத்துவமனை 20 ஆண்டு சேவை
சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் ஸ்ரீசரண் மருத்துவமனை 20 ஆண்டு சேவை
சிறந்த தொழில்நுட்ப வசதிகளுடன் ஸ்ரீசரண் மருத்துவமனை 20 ஆண்டு சேவை
ADDED : ஜூலை 01, 2025 12:24 AM

''திருப்பூர், பி.என்.ரோடு, போயம்பாளையம் பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ சரண் மருத்துவமனை, திருப்பூரின் மிகச்சிறந்த தொழில்நுட்ப வசதிகள் கொண்ட மருத்துவமனையாக, கடந்த, 20 ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றி வருகிறது'' என, அதன் நிறுவனர்கள் டாக்டர்கள் பழனிசாமி, மணிமேகலை பழனிசாமி ஆகியோர் கூறினர்.அவர்கள் மேலும் கூறியதாவது:
அனைத்து மருத்துவ பிரிவுகளும், நிபுணத்துவம் பெற்ற முழுநேர சிறப்பு மருத்துவர்களுடன் செயல்பட்டு வருகிறது. மூன்று நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களுடன், மகளிர் மற்றும் மகப்பேறு சிகிச்சைப்பிரிவு செயல்படுகிறது. இங்கு, சுகப்பிரசவம், சிசேரியன், கர்ப்பபை, சினைப்பை அறுவை சிகிச்சை உட்பட பெண்களுக்கான அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது.
கடந்த, 10 ஆண்டுகளாக செயல்படும், ஸ்ரீசரண் கருத்தரித்தல் மையத்தில், சிகிச்சை பெற்றதன் வாயிலாக, ஏராளமான தம்பதிகள் குழந்தை வரம் பெற்றுள்ளனர். திருப்பூரில் முதன் முறையாக 'காஸ்மெடிக் கைனகாலஜி' பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இரண்டு முழு நேர மருத்துவர்களுடன், அதிநவீன மருத்துவ முறையில், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைப்பிரிவு செயல்படுகிறது. இரு முழு நேர மருத்துவர்களுடன் செயல்படும் லேப்ராஸ்கோபி மற்றும் பொது அறுவை சிகிச்சைப்பிரிவில், ெஹர்னியா, அப்பென்டிக்ஸ், பித்தப்பை கல் நீக்கம் போன்ற அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முழு நேர மருத்துவர்களுடன் விபத்து மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு செயல்படுகிறது. அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில், நவீன உபகரணங்களுடன் டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்படுகிறது. தனியார் மற்றும் அரசு மருத்துவ காப்பீடு ஏற்றுக்கொள்ளப்படும். பிற விவரங்களுக்கு, 94425 44448, 0421-2485455 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, டாக்டர்கள் பழனிசாமி, மணிமேகலை பழனிசாமி ஆகியோர் கூறினர்.