/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடிட்டர் படிப்பில் சாதிக்கும் ஸ்ரீகுரு சர்வா சி.ஏ., அகாடமி
/
ஆடிட்டர் படிப்பில் சாதிக்கும் ஸ்ரீகுரு சர்வா சி.ஏ., அகாடமி
ஆடிட்டர் படிப்பில் சாதிக்கும் ஸ்ரீகுரு சர்வா சி.ஏ., அகாடமி
ஆடிட்டர் படிப்பில் சாதிக்கும் ஸ்ரீகுரு சர்வா சி.ஏ., அகாடமி
ADDED : டிச 09, 2024 06:32 AM

திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் நிலையம் அருகே செயல்படும் ஸ்ரீகுரு சர்வா சி.ஏ., அகாடமி மாணவ, மாணவியர், சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில், கடந்த 12 ஆண்டுகளாக மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்று வருகின்றனர்.
கடந்த டிச., 2023ல் நடந்த சி.ஏ., பவுண்டேஷன் தேர்வில் மாணவி மதுமிதா, ஏஞ்சல், கங்காதேவி, ரித்திகா ஆகியோர் முதல் நான்கு இடங்களைப் பிடித்து டிஸ்டிங்ஷனில் தேர்வு பெற்றனர். மே 2024ல் நடந்த சி.ஏ., இன்டர் தேர்வில் இங்கு பயின்ற மாணவர்கள் 12 பேர், இரு குரூப்களிலும் ஒரே முயற்சியில் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு சி.ஏ., இன்டர் தேர்வில் மாணவர் ராஜேஷ், தேசிய அளவில் 23வது இடம்((626/800) பிடித்தார். ஜெயக்குமார் (97/100), விஷ்ணுபாண்டி(96/100) ஆகியோர், காஸ்ட் அண்ட் மேனேஜ்மென்ட் பாடத்தில் தேசிய அளவில் அசத்தினர். ''இங்கு முழு நேரப் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன; ஒவ்வொரு மாணவன் மீதும் தனிக்கவனம் செலுத்துவதால் சாதிக்கின்றனர். இப்போது சேர்க்கை நடக்கிறது'' என்று இதன் நிர்வாகிகள் கூறினர்.