/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீகுமரன் பள்ளிகள் 16வது ஆண்டு விழா
/
ஸ்ரீகுமரன் பள்ளிகள் 16வது ஆண்டு விழா
ADDED : ஜன 12, 2025 11:58 PM

திருப்பூர்; ஊத்துக்குளி தாலுகா, செங்கப்பள்ளியில் உள்ள ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீகுமரன் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 16வது ஆண்டு விழா நடந்தது. கோமதி வரவேற்றார். இப்பள்ளிகளின் நிர்வாக இயக்குனர் மணி தலைமை தாங்கினார். தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் செயலாளர் நீல்ராஜ், குமரன் பள்ளிகளின் துணைத்தலைவர் கனிஷ்கா ரெட்டி, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் பொது மேலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.ஸ்ரீகுமரன் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜெயமுரளி, ஒருங்கிணைப்பாளர் ரேவதி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலெக்டர் கிறிஸ்துராஜ் பங்கேற்று பேசினார். கடந்த ஆண்டு 10 முற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகை, சான்றிதழ், மாவட்ட, மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை நந்தினி நன்றி கூறினார்.