/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு
/
இன்று ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு
ADDED : பிப் 24, 2024 11:48 PM
திருப்பூர்,;பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கான ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு, இன்று நடக்கிறது.
பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்காக, திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில், சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அதன்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் நலன் வேண்டி, இன்று காலை 9:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.
சிறப்பு வேள்வி வழிபாடு, திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம், சாற்றுமறை, தீபாராதனை நடைபெறும்; தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று பயன்பெறலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.