/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி பள்ளி விழிப்புணர்வு மனித சங்கிலி
/
ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி பள்ளி விழிப்புணர்வு மனித சங்கிலி
ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி பள்ளி விழிப்புணர்வு மனித சங்கிலி
ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி பள்ளி விழிப்புணர்வு மனித சங்கிலி
ADDED : பிப் 08, 2026 05:14 AM

திருப்பூர்: அவிநாசி, ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி சி.பி.எஸ்.இ. பள்ளியில் 'சமூக ஊடகம் - சீரான பயன்பாடு' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் அகஷ்யா விக்ரம் முன்னிலையில், காவல் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் இணைந்து பங்கேற்ற மனித சங்கிலி பேரணி, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் முன்பு நடந்தது.
சமூக ஊடகங்களைப் பாதுகாப்பாகவும்,பொறுப்புடனும் பயன்படுத்துதல்; பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய்தல்; இணைய மோசடிகளைக் கண்டறிதல்; மொபைல்போன் அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டது. மாணவர்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடத்திய விழிப்புணர்வு பேரணி பயனுள்ளது என்று பொதுமக்கள் வரவேற்றனர்.