/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவரானார் சீனிவாசன்
/
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவரானார் சீனிவாசன்
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவரானார் சீனிவாசன்
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவரானார் சீனிவாசன்
ADDED : ஜன 27, 2025 12:11 AM
திருப்பூர்; பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவராக சீனிவாசன் அறிவிக்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பா.ஜ., மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வகையில், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., வில், புதிய மாவட்ட தலைவர் அறிவிப்பு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.
மாநில துணை தலைவர் நரேந்திரன், மாவட்ட பார்வையாளர் செல்வகுமார், மாவட்ட தேர்தல் அதிகாரி வைரவேல், மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆறு பேர் போட்டியிருந்த நிலையில், மாவட்ட பொது செயலாளராக உள்ள சீனிவாசனை திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவராக தேர்வு செய்து கூட்டத்தில் அறிவித்தனர். தொடர்ந்து, பட்டாசு வெடித்து, புதிய தலைவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்ட தலைவர் சீனிவாசனை, சாரட் வாகனத்தில் செந்தில்வேல் அழைத்து சென்றார். அதன்பின், வித்யாலயாவில் உள்ள தியாகி சுந்தராம்பாள் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.