/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்னவெங்காயத்துக்கு நிலையான விலை; அரசு உதவ எதிர்பார்ப்பு
/
சின்னவெங்காயத்துக்கு நிலையான விலை; அரசு உதவ எதிர்பார்ப்பு
சின்னவெங்காயத்துக்கு நிலையான விலை; அரசு உதவ எதிர்பார்ப்பு
சின்னவெங்காயத்துக்கு நிலையான விலை; அரசு உதவ எதிர்பார்ப்பு
ADDED : ஜன 17, 2025 11:43 PM
உடுமலை; உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு, இரு சீசன்களில் சின்னவெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இச்சாகுபடியில், ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை, செலவாகிறது.
விதை நடவு முறையை பெரும்பாலான விவசாயிகள், கைவிட்டுள்ளனர்; நாற்றங்கால் அமைத்து, நாற்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்யும் முறையே தற்போது பின்பற்றப்படுகிறது. அறுவடை சீசனில், விலை வீழ்ச்சி ஏற்படும் போது, விளைநிலங்களில் பட்டறை அமைத்து, சின்னவெங்காயத்தை இருப்பு வைப்பது வழக்கம். இருப்பினும், விலை வீழ்ச்சியால், அதிக நஷ்டம் ஏற்பட்டு, ஆண்டுக்கு, ஒரு சீசன் மட்டுமே நடவு செய்யும் நிலைக்கு, சில விவசாயிகள் மாறியுள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதியில் இருந்து முன்பு, இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, சின்னவெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. சில வியாபாரிகள், விவசாயிகளிடமிருந்து சின்னவெங்காயத்தை வாங்கி தரம் பிரித்து, ஏற்றுமதி செய்து வந்தனர்; மத்திய அரசின் 'நேபட்' நிறுவனமும் இதற்கான வழிகாட்டுதல்களை வழங்கி வந்தது.
கடந்த சில ஆண்டுகளாக, பயிரின் வளர்ச்சி மற்றும் அறுவடையின் போது, போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதித்தனர்.
விவசாயிகள் கூறுகையில், 'அறுவடை சமயத்தில், சின்னவெங்காயம் விலை வீழ்ச்சியடைவதை தவிர்க்க, அரசு ஏற்றுமதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்,' என்றனர்.