ஸ்டாலின் பெயரில் உறுதி :தி.மு.க. வேட்பாளர் 'ஐஸ்'
ஸ்டாலின் பெயரில் உறுதி :தி.மு.க. வேட்பாளர் 'ஐஸ்'
ADDED : ஏப் 06, 2026 08:16 PM

அ நிறம் | அளவு
பல்லடம்:பல்லடம் தி.மு.க., வேட்பாளரான எம்.எல்.ஏ. செல்வராஜ் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். உறுதிமொழியின் இறுதியில், ஸ்டாலின் மீது உளமாற உறுதி கூறுகிறேன் என, வேட்பு மனுவில் இடம்பெறாத சொற்களை இணைத்து உறுதிமொழி ஏற்றார்.
படிவத்தில் இடம் பெற்றுள்ள வாசகங்களில் ஏதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்தி உறுதிமொழி ஏற்குமாறு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் கூறினார். இதையடுத்து ஆண்டவன் மீது ஆணையாக உளமாற உறுதி கூறுகிறேன் என்று மீண்டும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
