/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குன்றென நிமிர்ந்து நில்.. மாணவர் அறிவுத்திறனை உயர்த்திய 'பட்டம்' இதழ்
/
குன்றென நிமிர்ந்து நில்.. மாணவர் அறிவுத்திறனை உயர்த்திய 'பட்டம்' இதழ்
குன்றென நிமிர்ந்து நில்.. மாணவர் அறிவுத்திறனை உயர்த்திய 'பட்டம்' இதழ்
குன்றென நிமிர்ந்து நில்.. மாணவர் அறிவுத்திறனை உயர்த்திய 'பட்டம்' இதழ்
ADDED : டிச 09, 2024 11:48 PM

திருப்பூர்; கடந்த, 2018 முதல், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், 'வினாடி வினா' போட்டி நடத்தப்படுகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும், பள்ளி மாணவர்களுக்கு இந்த இதழ் கிடைக்கும். போட்டித்தேர்வு உட்பட பொது அறிவு சார்ந்த தேர்வுகளை எதிர் கொள்ள இந்த இதழ் உதவுவதால், இதை வாசிப்பதில் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்தாண்டு வினாடி - வினா போட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ்; சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியன சார்பில் நடைபெற்று வருகிறது. இவற்றுடன், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கைகோர்த்துள்ளது. சத்யா ஏஜென்சீஸ் நிறுவனம் இணைந்து நடத்துகிறது.
இதில், பங்கேற்க கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் முன்பதிவு செய்துள்ளன; பள்ளிகள் தோறும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் இடையே அரையிறுதி போட்டி நடைபெறும்.
இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்பட உள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
அவிநாசி - சேவூர் ரோடு, கருமாபாளையம் பகுதியில் உள்ள சாந்தி வித்யாலயா மெட்ரிக்., மேல் நிலைப்பள்ளியில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. தகுதிச்சுற்று போட்டியில், 47 மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், ஆங்கில அகர வரிசையில், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு இடையே வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், 'எச்' அணியில் இடம் பெற்ற, 7ம் வகுப்பு மாணவர்கள் ஜிஜூ கிருஷ்ணன், விக்ராந்த் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் ரேணுகாதேவி, 'பட்டம்' வினாடி - வினா ஒருங்கிணைப்பாளர்கள் லோகப்பிரியா, மேரி, ராஜலட்சுமி ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினர்.