/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துவக்கநிலை மாணவர்களுக்கு தரநிலை அறிக்கை அட்டை
/
துவக்கநிலை மாணவர்களுக்கு தரநிலை அறிக்கை அட்டை
ADDED : ஜன 19, 2024 11:58 PM
உடுமலை:துவக்க நிலை மாணவர்களுக்கு, தரநிலை அறிக்கை வழங்குவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ், செயல்வழிக்கற்றல் பாடம் நடத்தப்படுகிறது.
இதில் மாணவர்களின் திறன்களை அறிந்து கொள்வதற்கு, அவ்வப்போது செயல்முறை தேர்வு நடத்தப்படுகிறது.
மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்த, கூடுதலாக தற்போது அவர்களுக்கான தரநிலை அறிக்கை அட்டை வழங்குவதற்கு, கல்வித்துறை நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.
அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டிய தகவல்கள் குறித்து, ஆசிரியர்களுக்கு மாதிரிகளும் அனுப்பப்பட்டுள்ளது.
பெற்றோர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த அட்டைகள் இருப்பதும், மூன்று பருவங்களிலும் பாடவாரியாக மாணவர்களின் தரநிலைகளை பிரித்து பதிவிடுவது குறித்தும், அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'தரநிலை அட்டை வழங்குவதற்கு, கல்வித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும், அட்டைகளை பள்ளிகளில் பயன்படுத்துவதற்கான நடைமுறை குறித்து தகவல் இல்லை. கல்வியாண்டு நிறைவுபெறுவதற்குள் வருமென எதிர்பார்க்கப்படுகிறது,' என்றனர்.