/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில தடகளப்போட்டி மழையால் ஒத்திவைப்பு
/
மாநில தடகளப்போட்டி மழையால் ஒத்திவைப்பு
ADDED : அக் 24, 2025 12:06 AM
திருப்பூர்: தொடர் மழையால், தஞ்சையில் இன்று துவங்கவிருந்த மாநில தடகளப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
பள்ளிக்கல்வி துறை சார்பில், குடியரசு தின விழா மாநில தடகள போட்டி, தஞ்சை, சத்யா விளையாட்டு அரங்கில், இன்று (24ம் தேதி) துவங்கி 26ம் தேதி வரை மாணவியருக்கும், 27 முதல் 29 வரை, மாணவர்களுக்கும் நடைபெறுவதாக இருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தடகள போட்டியில், வெற்றி பெற்றவர்கள் மாநில தடகள போட்டிக்கு தயாராயினர்.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,'தொடர் மழையால், மாநில தடகள போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது; தேதி பின்னர் அறிவிக்கப்படும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

