/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில செஸ் போட்டி; 24 பேர் தகுதி
/
மாநில செஸ் போட்டி; 24 பேர் தகுதி
ADDED : அக் 25, 2024 10:44 PM
திருப்பூர்: திருப்பத்துார் மாவட்டத்தில் நடக்கும் மாநில சதுரங்க போட்டியில் பங்கேற்க, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 24 பேர் தேர்வாகியுள்ளனர்.
வெள்ளகோவில், முத்துார், ஸ்ரீ ஆனுார் வித்யாலயாவில், திருப்பூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி கடந்த, 10ம் தேதி நடந்தது.
குறுமைய அளவில் முதலிடம் பெற்ற வீரர், வீராங்கனைகள், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற, 24 பேர் திருப்பத்துாரில் வரும் 28-ல் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட உள்ள மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
தேர்வானோர் விபரம்
11 வயது, மாணவர் பிரிவில் தக் ஷன் (அவிநாசி, முருகு மெட்ரிக்), ஆதிலேஷ் (நேருநகர், ஊராட்சி நடுநிலைப்பள்ளி), தருண் (காங்கயம், ராஜா மெட்ரிக்), மாணவியர் பிரிவில், ரிஷிகா (திருப்பூர், ராம்நகர், ஸ்ரீ சாய் மெட்ரிக்), நிலா (உடுமலை, ஸ்ரீனிவாசா மெட்ரிக்), வைபவி (அவிநாசி, எஸ்.கே.எல்., பள்ளி).
14 வயது, மாணவர் பிரிவில், அபினேஷ் (ஊராட்சி நடுநிலைப்பள்ளி, நேரு நகர்), ரித்திஷ் (15 வேலம்பாளையம், ஜெய்சாரதா பள்ளி), கிருத்திக்பிரணவ் (ஜெய்ஸ்ரீராம் பள்ளி), மாணவியர் பிரிவில், ஹாசினி (அவிநாசி, முருகு மெட்ரிக்), நிரஞ்சனா (உடுமலை, சாரதா மெட்ரிக்), ஐஸ்வர்யா (தேன்மலர் பள்ளி, தாராபுரம்).
17 வயது மாணவர் பிரிவில் சவுதீஸ்குமார், மாதவன் (திருப்பூர், பிஷப் உபகாரசாமி பள்ளி),அஜய் (காங்கயம், ஜேசீஸ் மெட்ரிக்). மாணவியர் பிரிவில் மதுமிதா (குளோபல் பாலபவன் பள்ளி), ரித்திகா (உடுமலை,ஸ்ரீனிவாசா மெட்ரிக்), அர்ச்சனா (வி.கே., அரசு பள்ளி, அய்யங்காளிபாளையம்)
19 வயது மாணவர் பிரிவில், கோகுலகிருஷ்ணா (நெருப்பெரிச்சல், திருமுருகன் மெட்ரிக்), பத்மபிரியன் (இடுவம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி), சுகன்ரித்திக் (டீ பப்ளிக் பள்ளி, திருப்பூர்). மாணவியர் பிரிவில் சந்தியா (உடுமலை, ஸ்ரீநிவாசா மெட்ரிக்), இந்திரபானு (அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல்லடம்), வினோதிகா (லிட்டில் பிளவர் பள்ளி, திருப்பூர்).