தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநில கிரிக்கெட்; மாணவி தேர்வு

 மாநில கிரிக்கெட்; மாணவி தேர்வு

 மாநில கிரிக்கெட்; மாணவி தேர்வு


ADDED : டிச 08, 2025 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2025 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் மாநில அளவிலான பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கு திருப்பூர் மாணவி தேர்வாகியுள்ளார்.

மாவட்ட அளவிலான போட்டி 15, 19, 23 வயது பிரிவு மற்றும் சீனியர் என்று நான்கு பிரிவுகளாக தேனியில் நடந்தது. அதில் 700 பேர் ஆர்வம் காட்டி, 60 பேர் தேர்வாகி விளையாடினர். பின், பல மாவட்டங்களிலிருந்தும் மாநில அளவிலான போட்டிக்கு பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் திருப்பூரை சேர்ந்த தேவதர்ஷினி, 15 வயது பிரிவில் தேர்வாகியுள்ளார்.

தேவதர்ஷினி கூறிய தாவது:

மூன்றாம் வகுப்பிலிருந்தே எனக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது. அதற்கு என் தந்தை தான் காரணம். சிறு வயதில், அவர் கிரிக்கெட் விளையாடுவதை அவருடன் சென்று பார்ப்பேன். எனக்கும் விளையாட ஆசை வந்தது. அவரிடம் கேட்டபோது, விளையாட அனுமதித்தார். அருகிலுள்ள அகாடமியில் சேர்ந்தேன். முதல் நாளிலேயே நன்றாக விளையாடியதால் பாராட்டினர்.

நானும் கிரிக்கெட்டை தொடர ஆரம்பித்தேன். பெண்கள் கிரிக்கெட் மாநில போட்டிக்கு தேர்வாகியிருப்பது எனக்கு மட்டுமல்லாமல் என் பயிற்சியாளர், பெற்றோர்க்கும் பெருமையாக சேர்க்கிறது. கிரிக்கெட் போலவே தடகளத்திலும் ஆர்வம் இருக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us