ADDED : செப் 24, 2026 06:01 PM
திருப்பூர்: இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.) சார்பில், மாநில கிரிக்கெட் அணிக்கான தேர்வுப்போட்டி திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது.
அனைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களுக்கும், திருப்பூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தேசிய போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக, 19 வயது மாணவியர் கூடைப்பந்து, 17 வயது மாணவர் கூடைப்பந்து மாநில அளவிலான தேர்வுப்போட்டி திருப்பூர் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது. வரும் 30-ம் தேதி அவிநாசி, பழங்கரை, டீ பப்ளிக் மேல்நிலைப்பள்ளியில், 30ம் தேதி மற்றும் அக். 1-ம் தேதி ஆகிய இரு தினங்களில், கிரிக்கெட் 17 வயது மாணவர் அணித்தேர்வு காலை 7:00 மணி முதல் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு 86107 72729, 95660 02812 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
