/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில ஜூடோ போட்டி; கே.எஸ்.சி., பள்ளி அபாரம்
/
மாநில ஜூடோ போட்டி; கே.எஸ்.சி., பள்ளி அபாரம்
ADDED : டிச 05, 2024 06:21 AM

திருப்பூர்; பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாவட்ட ஜூடோ போட்டி சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், திருப்பூர், கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 14 வயது பிரிவில் மூன்று தங்கம், 17 மற்றும், 19 வயது பிரிவில் முறையே பத்து மற்றும் எட்டு தங்கம் உட்பட, 21 தங்க பதக்கங்களை கைப்பற்றினர்.
முதலிடம் பிடித்து தங்கம் வென்ற மாணவர்கள் இம்மாத இறுதியில், கன்னியாகுமரியில் நடக்கும், மாநில ஜூடோ போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். மாவட்ட சிலம்பப் போட்டி, 19 வயது பிரிவில் மாணவர் ஒருவர் தங்கம் கைப்பற்றியுள்ளார்; இவர், மாநில சிலம்ப போட்டிக்கு செல்கிறார்.
மாவட்ட போட்டியில் வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு செல்ல உள்ள, மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், உதவி தலைமை ஆசிரியர்கள் கர்னல், வசந்தாமணி, ஜூடோ பயிற்சியாளர் முரளி, உடற்கல்வி இயக்குனர் புஷ்பவதி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஆனந்தன், ஜெயசுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.