/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டி: தேர்வான வீரர்களுக்கு பாராட்டு
/
மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டி: தேர்வான வீரர்களுக்கு பாராட்டு
மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டி: தேர்வான வீரர்களுக்கு பாராட்டு
மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டி: தேர்வான வீரர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 15, 2024 12:32 AM

திருப்பூர்;கோவை, கற்பகம் பல்கலையில், மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டி, வரும், 16ம் தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்க உள்ள, திருப்பூர் மாவட்ட ஜூனியர் கபடி அணிக்கு, கடந்த, 11 முதல், 13ம் தேதி வரை, மாவட்ட கபடி கழகம் சார்பில், பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
பயிற்சி பெற்றவர்களின் தேர்வு செய்யப்பட்ட வீரர்களை மாநில போட்டிக்கும் வழியனுப்பும் விழா, நேற்று நடந்தது. விளையாட்டுச் சீருடை மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட கபடி கழக தலைமை புரவலர் சக்தி பிலிம்ஸ் சுப்ரமணியம் தலைமை வகித்தார். கபடி கழக சேர்மன் முருகேசன், மாநில அமெச்சூர் கபடி கழகப் பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம், மாவட்ட கபடி கழக துணைத்தலைவர்கள் ராமதாஸ், கவுன்சிலர் செந்துார் முத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கபடி கழக இணைச் செயலாளர் செல்வராஜ், செயற்குழு உறுப்பினர் தேவராஜ், மாவட்ட வளர்ச்சிக்குழு தலைவர் கார்லிக்ராஜூ, அணி பயிற்சியாளர் வினோத்குமார், மேலாளர் தண்டபாணி, அணித்தலைவர் தனுஷ்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.