/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில அளவிலான கபடி போட்டி; தளவாய்பட்டிணம் அணி வெற்றி
/
மாநில அளவிலான கபடி போட்டி; தளவாய்பட்டிணம் அணி வெற்றி
மாநில அளவிலான கபடி போட்டி; தளவாய்பட்டிணம் அணி வெற்றி
மாநில அளவிலான கபடி போட்டி; தளவாய்பட்டிணம் அணி வெற்றி
ADDED : அக் 21, 2024 11:36 PM

உடுமலை : உடுமலையில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில், பெண்கள் பிரிவில் செங்கல்பட்டு அணியும், ஆண்கள் பிரிவில் தமிழன் அணியும் முதல்பரிசை தட்டிச்சென்றன.
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு, விளையாட்டுத்துறை சார்பில், பல்வேறு போட்டிகளை அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, அவர்களது திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைகிறது.
இந்நிலையில்,உடுமலை, பொள்ளாச்சி ரோட்டிலுள்ள, லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை வளாகத்தில், மாநில அளவிலான கபடி போட்டிகள் நடந்தன. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆண்கள், பெண்கள் பிரிவில், 43 அணிகள் பங்கேற்றன.
இவர்கள் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று, திறமைகளை வெளிக்கொணர்ந்தனர். இந்த மாநில அளவிலான போட்டியில்,பெண்கள் பிரிவில், செங்கல்பட்டு பெண்கள் அணி முதல் பரிசு, ரூ.15 ஆயிரம் மற்றும் கோப்பையை தட்டிச்சென்றது.
ஆண்களுக்கான கபடி போட்டியில், தளவாய்பட்டிணம் தமிழன் கபடி அணியினர், முதல்பரிசு, ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பையை வென்றனர். இரண்டாம் பரிசை, பழநி போலீஸ் அணி பெற்றது. பரிசுத்தொகை, ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், உடுமலை மக்கள் பேரவைத்தலைவர் முத்துக்குமாரசாமி, இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி, வியாபாரிகள் சங்க செயலாளர் மெய்ஞானமூர்த்தி, பொருளாளர் ஜெகநாதன், அமராவதி சைனிக் பள்ளி ஆசிரியர் இளமுருகு, சங்க செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போட்டிக்கான ஏற்பாடுகளை, லெப்டினன்ட் சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை நிறுவனர் செல்வராஜ், டிரஸ்டி இன்ஜினியர் பாலமுருகன், அறக்கட்டளை ஆலோசகர் சந்திரன், தலைமை ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.