தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாநில அளவிலான பயிற்சி 76 விளையாட்டு வீரர் தேர்வு 

மாநில அளவிலான பயிற்சி 76 விளையாட்டு வீரர் தேர்வு 

மாநில அளவிலான பயிற்சி 76 விளையாட்டு வீரர் தேர்வு 


UPDATED : மே 15, 2026 09:38 PM

ADDED : மே 15, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 15, 2026 09:38 PM ADDED : மே 15, 2026 09:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:எஸ்.டி.ஏ.டி. மாநில விடுதியில் தங்கி, விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள திருப்பூரை சேர்ந்த 76 வீரர், வீராங்கனையர் தேர்வாகியுள்ளனர்.

நடுநிலைப்பள்ளி அளவில் இருந்தே விளையாட்டில் சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்க, மாநிலம் முழுதும், 28 இடங்களில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விடுதிகளை நடத்தி வருகிறது. இவ்விடுதியில் தங்குமிட வசதி, சத்தான உணவுடன், அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

இவ்விடுதிக்கான வீரர், வீராங்கனையரை தேர்வு செய்ய மாவட்ட அளவிலான தேர்வு மே முதல் வாரம் நடந்தது. ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில் நடந்த தேர்வில், மாவட்டம் முழுதும் இருந்து, 112 பேர் பங்கேற்றனர். கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, எறிபந்து, ஹாக்கி, கபடி, வாலிபால் மற்றும் தடகள போட்டிகளுக்கான பயிற்சிக்கு, 61 வீரர், 16 வீராங்கனையர் என, 77 பேர் திருப்பூரில் இருந்து தேர்வாகியுள்ளனர்.

தடகளத்தில் தேர்வான பத்து பேருக்கு நேரு உள்விளையாட்டு அரங்கிலும், கூடைப்பந்து, ஹாக்கியில் தேர்வானவர்களுக்கு மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்திலும், கால்பந்தில் தேர்வான, 24 பேருக்கு திண்டுக்கல்லிலும், கபடியில் தேர்வான, ஒன்பது பேருக்கு வேலுாரிலும், வாலிபாலில் தேர்வானவர்களுக்கு தஞ்சாவூரிலும், பெண்கள் கூடைப்பந்து அணிக்கு திருவண்ணாமலையிலும் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us