/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடை சுருக்கம் நீக்க அதிநவீன இயந்திரம்
/
ஆடை சுருக்கம் நீக்க அதிநவீன இயந்திரம்
ADDED : மார் 11, 2024 12:09 AM

திருப்பூர்:திருப்பூரில் கடந்த வாரம் நடந்து முடிந்துள்ள, 'நிட்-டெக்' கண்காட்சி, திருப்பூர் பனியன் தொழில் பிரிவு ஒவ்வொன்றக்கும், நவீன தொழில்நுட்பத்தில் உருவான மெஷின்களை வழங்கியுள்ளது. வடிவமைக்கப்படும் 'டி-சர்ட்' மற்றும் ஆயத்த ஆடைகளை அயர்ன் செய்வது, காலம் காலமாக நடந்து வருகிறது.
செக்கிங் முடிந்ததும், அயர்ன் செய்து, ஆடைகளை அழகாக மடித்து பேக்கிங் செய்வதும் ஒரு கலையாகவே பார்க்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் பல வந்திருந்தாலும், பேக்கிங் வரையிலான பணிகளை கண்காணிக்கப்பட வேண்டும்.
பனியன் ஆடைகளை, அயர்னிங் செய்யும் போது, ஆடைகளில் ஏற்படும் சுருக்கம், ஆடையின் தரத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துவிடுகிறது. அயர்னிங் செய்தாலும், மடிப்பு ஏற்படாத வகையில், ஆடைகளை தயார்படுத்தும் தொழில்நுட்பமும் வந்துள்ளது.
அதன்படி, 'சர்ட் பினிஷிங்' என்ற பெயரில், மின்சார பயன்பாட்டை குறைத்து, மின் செலவையும் குறைத்துள்ளது. பெரும்பாலும், 'ஸ்டீம்' மூலமாக, ஆடைகளை நவீன முறையில் அயர்ன் செய்து, சுருக்கம் நீக்கப்படுகிறது.
இவ்வகை இயந்திரங்களில், ஆடைகளை மாட்டி வைத்தால், 'ஸ்டீம்' வந்து, பலுான் போல் ஊசி, ஆடையின் சுருக்கத்தை நீக்குகிறது. முதன்முறையாக அறிமுகமாகியுள்ள இவ்வகை மெஷின்களை பயன்படுத்தினால், பினிஷிங் செலவு, மூன்றில் ஒரு பங்காக குறையும் என்கின்றனர், பிரபல மெஷின் வடிவமைப்பு நிறுவனத்தினர். பனியன் தொழில்துறையினர், புதுவகை மெஷின்களை பயன்படுத்துவதன் வாயிலாக, அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயாராக முடியும்.

