/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில ரேங்கிங் கேரம்; 511 வீரர்கள் பங்கேற்பு
/
மாநில ரேங்கிங் கேரம்; 511 வீரர்கள் பங்கேற்பு
ADDED : அக் 11, 2024 11:58 PM

திருப்பூர் : தமிழ்நாடு கேரம் அசோசியேஷன், திருப்பூர் மாவட்ட கேரம் சங்கம் சார்பில், சீனியர் மாநில ரேங்கிங் கேரம் போட்டி திருப்பூரில் மூன்று நாள் நடக்கிறது.
கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று, முதல் நாள் போட்டிகள் துவங்கின. மாநிலம் முழுதும், 30 மாவட்டங்களில் இருந்து, 18 முதல், 50 வயதுக்கு உட்பட்ட, 511 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்திபிலிம்ஸ் சுப்ரமணியம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சேர்மன் ஆண்டவர்ராமசாமி, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். மாவட்ட கேரம் சங்க தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாநிலம் கேரம் அசோசியேஷன் சீனியர் துணைத் தலைவர் எஸ்.சிவக்குமார் வரவேற்றார். மாநில கேரம் சங்க செயலாளர் மரிய இருதயம் தலைமை நடுவராக போட்டிகளை ஒருங்கிணைத்தார்.
நேற்றும், இன்றும் லீக் போட்டிகள் நடக்கிறது. வரும், 13ம் தேதி காலை 'நாக்அவுட்' காலிறுதி, அரையிறுதி போட்டிகளும், மாலையில் இறுதி போட்டி, பரிசளிப்பு விழாவும் நடக்கிறது.

