/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில ரேங்கிங் கேரம்; திருப்பூர் கணேஷ் முதலிடம்
/
மாநில ரேங்கிங் கேரம்; திருப்பூர் கணேஷ் முதலிடம்
ADDED : அக் 13, 2024 11:30 PM

திருப்பூர்: தமிழ்நாடு கேரம் அசோசியேஷன், திருப்பூர் மாவட்ட கேரம் சங்கம் சார்பில், சீனியர் மாநில ரேங்கிங் கேரம் போட்டி கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த, 11ம் தேதி துவங்கியது. மூன்று நாட்கள் நடந்த போட்டி, நேற்று நிறைவுற்றது.
மாநிலம் முழுதும், 30 மாவட்டங்களில் இருந்து, 18 முதல், 50 வயதுக்கு உட்பட்ட, 511 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் முதல் பரிசை கீர்த்தனா (சென்னை), இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசு முறையே ேஷாபிகா (சென்னை), சுபர்ணா (கோவை) பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் கணேஷ் (திருப்பூர்) முதலிடம், அப்துல்ஆசிப் (சென்னை) இரண்டாமிடம், அருண்கார்த்திக் (சென்னை) மூன்றாமிடம். ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் அகர்ஷன் - பிரதீப் (கோவை), இரண்டாமிடம் அருண்கார்த்திக் - சுந்தரம் (சென்னை), மூன்றாமிடம் கணேஷ் - தங்கராஜ் (திருப்பூர்) பெற்றனர்.
வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மேயர் தினேஷ்குமார், விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சேர்மன் ஆண்டவர் ராமசாமி, உள்ளிட்டோர் பரிசு வழங்கி பாராட்டினர்.