/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில வாலிபால் போட்டி; திருப்பூர் மாவட்ட அணி தேர்வு
/
மாநில வாலிபால் போட்டி; திருப்பூர் மாவட்ட அணி தேர்வு
மாநில வாலிபால் போட்டி; திருப்பூர் மாவட்ட அணி தேர்வு
மாநில வாலிபால் போட்டி; திருப்பூர் மாவட்ட அணி தேர்வு
ADDED : ஜன 22, 2024 01:04 AM

திருப்பூர்:வேலுாரில் நடக்கும் மாநில வாலிபால் போட்டியில் பங்கேற்க, 12 பேர் கொண்ட, அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வேலுாரில் ஜன., 27 முதல், 30 வரை, 41வது சப்-ஜூனியர் மாநில வாலிபால் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்கும் திருப்பூர் மாவட்ட வாலிபால் அணித் தேர்வு, திருப்பூர், காங்கயம்ரோடு, வித்ய விகாஷினி பள்ளியில் நேற்றுநடந்தது.
மாநில வாலிபால் அசோசியேஷன் துணை சேர்மன், மாவட்ட வாலிபால் அசோசியேஷன் தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.
அணியின் தேர்வு குழு தலைவரும், முன்னாள் இந்திய அணி வீரரான தேவராஜன், மாநில அணியில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்தார்.
அலங்கியம் ஸ்போர்ட்ஸ் கிளப் சேகர், பொருளாளர் ராஜேந்திரன், இணை செயலாளர்கள் பிரகாஷ் , பிரேம், உடற்கல்வி ஆசிரியர் முருகன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். தேர்வில் மொத்தம், 47 பேர் பங்கேற்றனர். இவர்களில், 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.