ADDED : பிப் 15, 2026 06:13 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: மாநில அளவிலான யோகாசனப்போட்டி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள நந்தா சென்ட்ரல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடந்தது.
இதில் 12 பள்ளிகளில் இருந்து 413 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற திருப்பூர் மாவட்டம், பெருமா நல்லுார் தேவராயன் ஸ்கூல் ஆப் எக்ஸலென்ஸ் மாணவ, மாணவியர் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியரையும், பயிற்சியளித்த ஆசிரியர் மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியர்கள் சிவானந்தம், மணிகண்டன் ஆகியோரையும் பள்ளி செயலாளர் பிரசன்னா அங்குராஜ், முதல்வர் பாலமுருகன் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.
