ADDED : மார் 31, 2025 07:15 AM
உ.பி., மாநிலத்தை சேர்ந்த அங்கித் திவாரி, 26 மற்றும் 14 வயது சிறுவன், பல்லடம் அடுத்த அருள்புரம் செந்துாரன் காலனியில் வசித்தபடி, பனியன் கம்பெனியில் வேலை பார்க்கின்றனர். அருள்புரம் சிவசக்தி நகரில் உள்ள விநாயகர் கோவிலில் 1.25 அடி உயர வெண்கலத்தினால் ஆன முருகன் உற்சவமூர்த்தி சிலை உள்ளது. நேற்று முன்தினம், இக்கோவிலுக்குச் சென்ற வட மாநில தொழிலாளர்கள் இருவரும்,
நள்ளிரவில், குச்சியை பயன்படுத்தி, முருகன் சிலையை வெளியே எடுத்தனர். சிலையுடன் வெளியே சென்ற இருவரிடமும், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிலை கீழே கிடந்ததாகவும், அதைத்தான் தாங்கள் எடுத்துச் செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். சந்தேகம் அடைந்த போலீசார், விசாரணைக்காக இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்றனர். சிலை காணாமல் போனது குறித்து, கோவில் நிர்வாகிகள் பல்லடம் போலீசில் புகார் தெரிவித்தனர். அங்கித் திவாரியை பல்லடம் கிளை சிறையிலும், உடன் இருந்த, 14 வயது சிறுவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் சேர்நத்தனர்.