/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெருவிளக்கை அணைத்து மருந்துக்கடையில் திருட்டு
/
தெருவிளக்கை அணைத்து மருந்துக்கடையில் திருட்டு
ADDED : பிப் 06, 2024 12:44 AM
பல்லடம், பிப். 6--
பல்லடம், சின்னக்கரை - லட்சுமி நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவா, 30. ஆறுமுத்தாம்பாளையம் நால்ரோடு பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம்போல் இரவு, கடையை பூட்டி சென்றார்.
நேற்று காலை கடை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு மற்றும் கல்லா பெட்டி உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கடை ஷட்டரின் இரண்டு பூட்டுகள் மற்றும் கல்லா பெட்டி ஆகியவற்றை உடைத்த திருடர்கள், உள்ளிருந்த, 40 ஆயிரம் பணம் மற்றும் டூத் பேஸ்ட், பிரஷ், சோப்பு ஆகியவற்றை திருடி சென்றனர். உடைத்த பூட்டு மற்றும் கல்லா பெட்டியை ரோட்டில் வீசி சென்றனர்.
இதேபோல், எம்.ஏ., நகரை சேர்ந்த பிரசாத் 33, என்பவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது கடையிலும் பூட்டு உடைத்து, 2 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர். யாரிடமும் சிக்காமல் இருக்க வேண்டி, மருந்து கடை அருகில் உள்ள தெரு விளக்கை அணைத்துள்ளனர். இவ்வாறு, அருகருகே உள்ள இரண்டு கடைகளை உடைத்து திருடப்பட்டது, இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.