UPDATED : ஆக 26, 2026 05:58 PM
ADDED : ஆக 26, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
ஊதியூர்:ஊதியூர்-குண்டடம் ரோட்டில், மலைகண்ணிமார் கருப்பண்ணசாமி கோவில் அருகே அதிகாரிகள் ஆகஸ்ட் 25ல் சோதனை நடத்தினர். அப்போது, லாரியில் அனுமதியின்றி ஏழு டன் ஓடை கற்கள் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, லாரி மற்றும் ஓடை கற்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய டிரைவரை, ஊதியூர் போலீசார் தேடி வருகின்றனர்.
