/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கணும்
/
பள்ளிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கணும்
பள்ளிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கணும்
பள்ளிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கணும்
ADDED : ஜன 20, 2025 11:05 PM
உடுமலை; உடுமலை கிராம ஊராட்சிகளில் உள்ள அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்காத வகையில், சிறப்பு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு பொங்கல் விடுமுறை முடிந்து மீண்டும் வகுப்புகள் நேற்று துவக்கப்பட்டுள்ளது.
தற்போது இரண்டு நாட்களாக பரவலாக, உடுமலை சுற்றுப்பகுதியில் மழை பெய்துள்ளது. நீண்ட நாட்களாக பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்கள் விடுமுறையில் இருப்பதால் பராமரிப்பில்லாமல் உள்ளது. இந்நிலையில் மழை பெய்துள்ளதால், மழைநீர் தேங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலமும் நிறைவடைந்துள்ளதால், இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுப்பது மற்றும் புகார் அளிப்பது குறித்து, பள்ளி நிர்வாகத்தினரும் குழப்பத்தில் உள்ளனர்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள சிறப்பு அலுவலர்கள் மற்றும் ஒன்றிய நிர்வாக சிறப்பு அலுவலர்கள், பள்ளிகளில் மழைநீர் தேங்கியிருப்பதை விரைவில் அப்புறப்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதற்கும், தீவிரம் காட்ட வேண்டுமென ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

