/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பங்குச்சந்தை முதலீடு ரூ.5 லட்சம் கைவரிசை
/
பங்குச்சந்தை முதலீடு ரூ.5 லட்சம் கைவரிசை
ADDED : ஏப் 24, 2025 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், தாராபுரம் ரோட்டை சேர்ந்த 35 வயது நபரின் மொபைல் போன் எண்ணை, பங்குச்சந்தை தொடர்பான குழுவில் இணைத்தனர்.
அதில், பேசிய நபர் குறைந்த முதலீட்டுக்கு, அதிகப்படியான லாபம் பெறலாம் என கூறினர். இதனை நம்பிய அவர் செயலியை பதிவிறக்கம் செய்து, பல்வேறு தவணைகளாக, 5 லட்சம் ரூபாயை செலுத்தினார். பின், லாபத்துடன் வந்த பணத்தை எடுக்க முயன்ற போது, கூடுதலாக பணத்தை செலுத்துமாறு கூறினர். ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.