/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜி.என்., கார்டன் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது நிறுத்தம்
/
ஜி.என்., கார்டன் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது நிறுத்தம்
ஜி.என்., கார்டன் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது நிறுத்தம்
ஜி.என்., கார்டன் பாறைக்குழியில் குப்பை கொட்டுவது நிறுத்தம்
ADDED : ஜூலை 20, 2025 11:15 PM
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகரில், தினசரி 700 முதல் 800 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இவற்றை மாநகராட்சி நிர்வாகம் நெருப்பெரிச்சல் அடுத்த ஜி.என்., கார்டன் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டி வந்தது.
''குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படும். சுகாதாரக் கேடு ஏற்படும். எனவே, இங்கு குப்பை கொட்டக்கூடாது'' என அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர், பத்திர எழுத்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். குப்பை கொட்டுவதை நிறுத்த வலியுறுத்தி கருப்பு கொடியேந்தி போராட்டம், கடையடைப்பு, குப்பை லாரி சிறை பிடிப்பு, வீடுகளில் கருப்பு கொடி கட்டுதல், என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி நிர்வாகம் அங்கு குப்பை கொட்டி வந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் மேயர் தினேஷ் குமார், குப்பை கொட்ட 10 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தார். மேயர் கேட்டுக்கொண்ட 10 நாட்கள் அவகாசம் கடந்த 17ம் தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து, குப்பை கொட்டினால் குப்பை கொட்ட வரும் லாரியை சிறைத்து போராட்டத்தில் ஈடுபட பொது மக்கள் திட்டமிட்டனர்.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் முதல் குப்பை கொட்டுவதை நிறுத்தியது. இனி இங்கு குப்பை கொட்ட மாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.