/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் வைக்கோல்
/
சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் வைக்கோல்
சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் வைக்கோல்
சிவன்மலை ஆண்டவன் கோவில் உத்தரவு பெட்டியில் வைக்கோல்
ADDED : பிப் 26, 2025 07:27 AM
காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் வைக்கோல் வைத்து பூஜிக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில், அருணகிரிநாதரால் பாடல் பெற்றது. இக்கோவிலில் உள்ள உத்தரவு பெட்டியில், சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் சென்று, குறிப்பால் உணர்த்தப்படும் பொருளை வைத்து பூஜை செய்வது நுாற்றாண்டு வழக்கமாக உள்ளது. இவ்வாறு வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடப்பை முன்கூட்டி ஆருடம் சொல்வதாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அடுத்த பொருள் வரும் வரை, முந்தைய பொருள் பெட்டியில் இடம் பெறும்.
கடைசியாக கடந்த டிச., 17ம் தேதி முதல் திருவோட்டில் விபூதி, ருத்ராட்சம், திருப்புழ் புத்தகம் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல், வைக்கோல் இடம் பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த பக்தர் சபாபதி, 65, கனவில் இதற்கான உத்தரவு கிடைத்துள்ளது. இதுகுறித்து கோவில் சிவாச்சியர் ஒருவர் கூறியதாவது: வைக்கோல் வைத்துள்ளதால், தீவனம் பற்றாக்குறை ஏற்படுமா அல்லது அதிகரிக்குமா என போகப்போகத்தான் தெரியவரும். இவ்வாறு கூறினார்.