/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
25 பேரை துரத்திக்கடித்த தெரு நாய்கள்
/
25 பேரை துரத்திக்கடித்த தெரு நாய்கள்
ADDED : பிப் 13, 2024 12:30 AM

பல்லாங்குழி
செல்லாண்டியம்மன் துறை, வளம் பாலம் சந்திப்பு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். புதிய தார் ரோடு போட வேண்டும்.
- செல்வமணி, செல்லாண்டியம்மன் துறை.
திருப்பூர், அவிநாசி ரோடு, தீயணைப்பு துறை அலுவலகம் முன் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. ரோடு போட வேண்டும்.
- சிவசுப்ரமணியம், காந்திநகர். (படம் உண்டு)
இருள்மய வீதிகள்
அவிநாசி, அம்மாபாளையம் - ராக்கியாபாளையம் ரோட்டில் தெருவிளக்கு எரிவதில்லை. வீதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
- சண்முகநாதன், அம்மாபாளையம். (படம் உண்டு)
திருப்பூர், 32வது வார்டு, பண்டிட் நகர், கோல்டன் நகர் மெயின் ரோட்டில், இரண்டு வீதிகளில் தெருவிளக்கு எரிவதில்லை. இருள் சூழ்ந்து காணப்படுகிறது; திருட்டு பயம் உள்ளது.
- ஜோதிமணி, பண்டிட் நகர். (படம் உண்டு)
பெயர்ந்த சாலை
திருப்பூர், வெள்ளியங்காடு, கே.எம்.ஜி., நகர் மூன்றாவது வீதியில், சமீபத்தில் போட்ட சாலை சேதமடைந்து, பெயர்ந்து வருகிறது. பணியின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
- தீபா, வெள்ளியங்காடு. (படம் உண்டு)
மரங்கள் மாயம்
திருப்பூர், அங்கேரிபாளையம், ஜீவா காலனி ஸ்டாப்பில் இரவில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. யார் வெட்டி சென்றனர் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
- லோகநாதன், அங்கேரிபாளையம். (படம் உண்டு)
பணி மந்தம்
திருப்பூர், கருவம்பாளையம், பள்ளிக்கு பின்புறம் குழாய் பதிக்க குழி தோண்டி அப்படியே விடப்பட்டுள்ளது. பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
- திரு, கருவம்பாளையம். (படம் உண்டு)
கொசுத்தொல்லை
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் டூவீலர் ஸ்டாண்ட் பின்புறம் கழிவுகளை கொட்டி வைத்திருப்பதால், மாலை நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. சுத்தம் செய்து, கொசு மருந்து அடிக்க வேண்டும்.
- பவித்ரன், காமராஜர் ரோடு. (படம் உண்டு)
மூச்சுத்திணறல்
திருப்பூர், 24வது வார்டு, காந்தி நகர், லட்சுமி தியேட்டர் ரோட்டில் கொட்டப்படும் குப்பைகளை தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் மூச்சுத்திணறுகின்றனர்.
- சந்தீப், லட்சுமி தியட்டர் ரோடு. (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
திருப்பூர், விஜயாபுரம், காமாட்சி நகர், இரண்டாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- பாலசண்முகம், காமாட்சிநகர். (படம் உண்டு)
நாய்த்தொல்லை
திருப்பூர், 56வது வார்டு, கரட்டாங்காடு 4வது வீதி, எம்.ஆர்., நகரில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. நாய்கள் இதுவரை 25 பேருக்கு மேல் கடித்துள்ளன.
- பாக்கியலட்சுமி, எம்.ஆர்., நகர்.
காட்சிப்பொருள்
திருப்பூர், அவிநாசி ரோடு, ஸ்டேன்ஸ் ரோடு இரண்டாவது வீதியில், தபால்துறை வைத்துள்ள தபால்பெட்டி பயன்பாட்டில் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது.
- முத்துக்குமார், ஸ்டேன்ஸ் ரோடு. (படம் உண்டு)
ரியாக் ஷன்
சாலை அமைப்பு
திருப்பூர் அனுப்பர்பாளையம், மார்க்கெட் வீதியில் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. புதியதாக தார் ரோடு போட்டு விட்டனர்.
- சுரேஷ், அனுப்பர்பாளையம். (படம் உண்டு)