/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உலா வரும் தெருநாய்கள்; அச்சத்தில் பொதுமக்கள்
/
உலா வரும் தெருநாய்கள்; அச்சத்தில் பொதுமக்கள்
ADDED : ஜூன் 27, 2025 09:27 PM

உடுமலை; உடுமலை நகராட்சி பகுதிகளில், தெரு நாய்கள் அதிகளவு சுற்றி வருவதால், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.
உடுமலை நகராட்சி பகுதிகளிலுள்ள ரோடுகளில், தெரு நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகிறது. இவை, குழந்தைகள், பெரியவர்களை கடித்து வருவதோடு, ரோடுகளில் திரிவதால், வாகன விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
இறைச்சி மற்றும் கோழிக்கடைகளில் வெளியேறும் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்பட்டு வருவது, நாய்களுக்கு உணவாகவும், அவற்றின் பெருக்கத்திற்கும் காரணமாக உள்ளது.
உடுமலை நகர பகுதியிலுள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த, குடும்பக்கட்டுப்பாடு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றில் நடக்கும் முறைகேடு மற்றும் நகருக்கு அருகிலுள்ள ஊராட்சிகளில் திட்டம் செயல்படுத்தப்படாததால், தெரு நாய்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படாத நிலை உள்ளது.
தெரு நாய்களால், பொதுமக்கள் பாதிப்பதை தடுக்க, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.