/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை பெறலாம்
/
சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை பெறலாம்
ADDED : அக் 24, 2025 12:01 AM
திருப்பூர்: மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் சாலையோர வியாபாரிகளுக்கு, பிரதமர் சாலையோர வியாபாரிகள் மேம்பாடு திட்டத்தின் கீழ், அடையாள அட்டை மற்றும் வியாபார சான்று வழங்கப்படுகிறது. இதற்கான சிறப்பு முகாம் மாநகராட்சி சார்பில் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தினமும், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இம்முகாம் பின்வரும் இடங்களில் நடைபெறவுள்ளது.
முதல் மண்டலம் - வேலம்பாளையம் மண்டல அலுவலகம், 2வது மண்டலம் - நஞ்சப்பா நகர் அலுவலகம், 3வது மண்டலம் - நல்லுார் மண்டல அலுவலகம் மற்றும் 4 வது மண்டலம் முருகம்பாளையம் மண்டல அலுவலகம்.
சாலையோர வியாபாரிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், அத்துடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும். பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் தங்கள் மொபைல் போன் எண்ணுக்கு தகவல் கிடைத்த பின் உரிய மண்டல அலுவலகத்தில் இதற்கான சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

