/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மே 20ம் தேதி வேலைநிறுத்தம்; தொழிற்சங்கங்கள் ஆலோசனை
/
மே 20ம் தேதி வேலைநிறுத்தம்; தொழிற்சங்கங்கள் ஆலோசனை
மே 20ம் தேதி வேலைநிறுத்தம்; தொழிற்சங்கங்கள் ஆலோசனை
மே 20ம் தேதி வேலைநிறுத்தம்; தொழிற்சங்கங்கள் ஆலோசனை
ADDED : ஏப் 16, 2025 10:52 PM

திருப்பூர்; தொழிலாளர் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். அனைத்து தொழிலாளர் களுக்கும், குறைந்தபட்சம், 26 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும். பொதுத்துறை பங்குகளை, தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது. விவசாயிகளின் முக்கிய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், மே 20ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடக்கிறது.
திருப்பூர் ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில் இதுதொடர்பாக நடந்த தொழிற்சங்கங்களின் ஆலோசனைக்கூட்டத்துக்கு, ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுசெயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். தொழிற்சங்க பிரதிநிதிகள் சம்பத் (சி.ஐ.டி.யு..), ரங்கசாமி (எல்.பி.எப்.,), ஈஸ்வரன் (ஐ.என்.டி.யு.சி.,), முத்துசாமி (எச்.எம்.எஸ்.,), சக்திவேல் (எம்.எல்.எப்.,), முத்துகிருஷ்ணன் (ஏ.ஐ.சி.சி.டி.யு.,), சதீஷ் சங்கர் (யு.டி.யு.சி.,) உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
மே, 20ம் தேதி நடக்கும் வேலை நிறுத்தத்தை திருப்பூரில் வெற்றிகரமாக நடத்த வேண்டும். வரும், 25ல், தயாரிப்பு மாநாடு நடத்த வேண்டும். மே 3ம் தேதி, தொழில் அமைப்புகளிடம், வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கை குறித்து, தயாரிப்பு மாநாட்டில் முடிவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.