/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலை நிறுத்தப் போராட்டம் அரசு ஊழியர்கள் பிரசாரம்
/
வேலை நிறுத்தப் போராட்டம் அரசு ஊழியர்கள் பிரசாரம்
வேலை நிறுத்தப் போராட்டம் அரசு ஊழியர்கள் பிரசாரம்
வேலை நிறுத்தப் போராட்டம் அரசு ஊழியர்கள் பிரசாரம்
ADDED : நவ 25, 2025 06:45 AM

திருப்பூர்: புதிய பென்சன் திட்டம் ரத்து, காலிப்பணியிடங்கள் நிரப்புதல், அரசு துறைகளில் தனியார் மற்றும் ஒப்பந்த பணியாளர் நியமனம் ரத்து உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் முன் வைத்துள்ளனர்.இவற்றை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் அரசு ஊழியர் சங்கத்தினர் அறிவித்து நடத்தி வருகின்றனர்.
இதில் ஒரு கட்டமாக டிச. 4ம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, திருப்பூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில், நேற்று, காலேஜ் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பிரசார இயக்கம் நடைபெற்றது.
வரும், 28ம் தேதி வரை இப்பிரசார இயக்கம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்பட உள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.