/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை; கல்வி உதவி தொகையுடன் சான்றிதழ் படிப்பு
/
மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை; கல்வி உதவி தொகையுடன் சான்றிதழ் படிப்பு
மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை; கல்வி உதவி தொகையுடன் சான்றிதழ் படிப்பு
மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை; கல்வி உதவி தொகையுடன் சான்றிதழ் படிப்பு
ADDED : மே 30, 2025 11:58 PM
உடுமலை ; உடுமலையிலுள்ள, மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
கலைப்பண்பாட்டுத்துறை சார்பில், மாவட்ட அரசு இசைப்பள்ளி, உடுமலை தளி ரோட்டிலுள்ள, நகராட்சி பழைய கட்டடம், தாகூர் மாளிகையில் செயல்பட்டு வருகிறது. தற்போது, அரசு இசைப்பள்ளியில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இங்கு, குரல் இசை, நாதசுரம், தவில், தேவாரம், வயலின், பரத நாட்டியம், மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகள் பயிற்சி காலமாகவும், அரசு சான்றிதழ், படிப்பு, உடனடி வேலைவாய்ப்பு உள்ளது.
12 வயது முதல், 25 வயது வரை உள்ள மாணவ, மாணவியர் சேரலாம். கல்விக்கட்டணம் ஆண்டுக்கு, ரூ.350 ஆகும். அரசு சார்பில், விலையில்லா பாடநுால், மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகையாக, ரூ.400 மற்றும் விடுதி வசதி உள்ளது, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு, 10ம் வகுப்புக்கு கீழ் படித்து, இங்கு சேர்ந்து படித்தால் மூன்றாண்டுகள் கழித்து, 10ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு முடித்து சேரும் மாணவர்கள் மூன்றாண்டு இங்கு படிப்பு முடிந்தவுடன், 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும் ஐ.டி.ஐ., பி.ஏ., எம். ஏ., என இளங்கலை முடித்த மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம். 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் இங்கு படிக்கலாம்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில், இந்து சமய அறநிலையத்துறை ஆலயங்கள், திரை இசை அமைப்பாளராகவும் சின்னத்திரை பாடகராகவும், நடன கலைஞராகவும், வெளிநாடுகளில் இசைக்கலைஞராகவும் என பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன.
நிரந்தர வருமானம் ஈட்டும் வகையில், சுயதொழில் கலைஞராகவும் பல வழிகளில் சிறந்து விளங்கலாம்.
அரசு இசைப்பள்ளியில் சேர விருப்பம் உள்ளவர்கள், தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, உடுமலை என்ற முகவரியிலும், மொபைல் எண் 95664 73769; 9443 207376 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம், என தலைமை ஆசிரியர் சரவண மாணிக்கம் தெரிவித்துள்ளார்.