ADDED : அக் 16, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ், பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில், குமார் நகர் சிக்னலில் நேற்று போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அவ்வழியாக வந்த வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரமும் நடந்தது. பள்ளி தாளாளர் மரிய அந்தோணி, தலைமையாசிரியர் பீட்டர் மரியதாஸ், லயன்ஸ் கிளப் பட்டய தலைவர் வின்சென்ட் உட்பட பலர் பங்கேற்றனர்.