ADDED : நவ 11, 2024 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : ''தமிழகத்துக்கு பள்ளிக்கல்வி நிதியை விடுவிக்க கோரி, வரும் 26ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' என, மாணவர் பெருமன்ற மாநிலக்குழு அறிவித்துள்ளது.
திருப்பூரில் நேற்று நடந்த மாணவர் பெருமன்ற மாநிலக்குழு கூட்டத்துக்கு மாநில தலைவர் இப்ராஹிம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் தினேஷ், திருப்பூர் எம்.பி., சுப்பராயன் உள்ளிட்டோர் பேசினர்.
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய, பள்ளிக்கல்வி நிதியை, உடனடியாக வழங்க வேண்டும். தமிழக கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி, வரும் 26ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.