/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவியர் பேரவை தேர்தல் வாகை சூடியவர் பதவியேற்பு
/
மாணவியர் பேரவை தேர்தல் வாகை சூடியவர் பதவியேற்பு
ADDED : செப் 28, 2024 11:14 PM
திருப்பூர்: திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரியில், 2024 - 2025 ம் ஆண்டுக்கான மாணவியர் பேரவை தேர்தல், புதிய நிர்வாகிகள் தேர்வு நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் வசந்தி வரவேற்றார்.
கோவை கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணை பதிவாளர் அர்த்தநாரீஸ்வரன் தலைமை வகித்தார். கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணை பதிவாளர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.'இலக்குகளே இன்பத்துக்கு வழி' எனும் தலைப்பில், எம்.எம்., குரூப் சேர்மன் பிரபு, 'பேன் டூ பேர்பார்ம்' எனும் தலைப்பில் சினிமா இயக்குனர் புகழ் ஆகியோர் பேசினர்.
கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் முத்துரத்தினம், மேலாளர் நடராஜ், சார்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் கார்த்திகை செல்வி, கூட்டுறவு சார்பதிவாளர் செந்தில்நாதன், கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாணவியர் சேர்மனாக ராகவர்த்தினி, (பி.காம்.,), துணை சேர்மனாக கணேஷ்ஸ்ரீ, செயலாளராக இந்திரா (பி.எஸ்.சி., சி.எஸ்., டி.ஏ.,), பொருளாளராக தமிழ்செல்வி, கலைப்பிரிவுக்கு கனிகா, அறிவியல் பிரிவு மீனா குமாரி, முதுகலை பிரிவுக்கு நித்யாஸ்ரீ (எம்.காம்.,) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாணவியர் பேரவை பொறுப்பாளர் பொன்மலர், புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினர். பேரவை உறுப்பினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பொறுப்பேற்றுக்கொண்டனர். கல்லுாரி மாணவியர் பேரவை தலைவி ராகவர்த்தினி நன்றி கூறினார்.