ADDED : ஆக 25, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: மங்கலம் கதிரவன் பள்ளியில் மாணவர் மன்றம் பதவியேற்பு விழா நடந்தது.
மங்கலம் கதிரவன் மெட்ரிக் பள்ளியில் மாணவர் மன்றம் பதவி ஏற்பு விழா நடந்தது. பள்ளியின் செயலாளர் ராஜ்குமார், பள்ளி தாளாளர் ஸ்ரீ சரண்யா ராஜ்குமார் பங்கேற்று, மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர். பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ தலைவர்கள் லக் ஷன், தனுஸ்ரீ மற்றும் துணை தலைவர்கள் அர்ஷத் ஆரிப், மதிபாரதி ஆகியோருக்கு கலை, விளையாட்டு, ஒழுக்கம், தன் சுத்தம் மற்றும் சேர, சோழ பாண்டிய, பல்லவ போன்ற அணி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் என, 22 தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதக்கம் வழங்கி, பதவிபிரமாணம் செய்து வைத்தனர்.
