/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்வாயில் குளிக்க சென்ற மாணவர் பலி
/
கால்வாயில் குளிக்க சென்ற மாணவர் பலி
ADDED : மார் 26, 2025 09:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை, தும்பலப்பட்டியைச்சேர்ந்த கண்ணன் மகன் வசந்தகுமார்,18. தனியார் பள்ளியில், 12ம் வகுப்பு படித்து வந்த அவர், தேர்வு முடிந்ததை கொண்டாடும் வகையில், நண்பர்கள் 12 பேருடன், நேற்று வாளவாடியிலுள்ள நண்பர் சர்வேஸ் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.
உணவு சமைத்து சாப்பிட்ட பின், அருகிலுள்ள பி.ஏ.பி., கால்வாயில் குளிக்கச்சென்றுள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக, ஆழமான மற்றும் அதிக வேகமுள்ள வாய்க்கால் நீரில் அடித்துச்செல்லப்பட்டார். தகவல் கிடைத்ததும், உடுமலை தீயணைப்பு துறையினர், வாய்க்காலில் தேடிய நிலையில், கிளை வாய்க்கால் அருகே சடலமாக மீட்டனர். தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.