/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு?
/
கிணற்றில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு?
ADDED : செப் 25, 2024 12:23 AM
அவிநாசி : தத்தனுார் ஊராட்சி, வெள்ளமடை கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி ராமசாமி மகன் கவுதம், 15. அருகிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி முடிந்ததும், தனது நண்பர்களுடன் சாவக்கட்டுபாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் பழக சென்றார்.
காலி பிளாஸ்டிக் கேனை இடுப்பில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். மற்றவர்கள் கிணற்று மேட்டிலேயே இருந்து விட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக கேன் அவிழ்ந்து, தத்தளித்தார்.
இதனை பார்த்து உடன் சென்றவர்கள் சத்தம் போட்டதில், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அப்பகுதிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி நீரில் மூழ்கிய கவுதமை தேடி வருகின்றனர். சேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.