/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர் கை வண்ணம்; பயணியர் பாராட்டு
/
மாணவர் கை வண்ணம்; பயணியர் பாராட்டு
ADDED : அக் 04, 2025 11:15 PM

தி ருப்பூர், முதலிபாளையத்தில் இயங்கி வரும் நிப்ட்-டீ கல்லுாரி மாணவர்கள், தங்கள் கலைத் திறனை பல்வேறு வகையில் வெளிப்படுத்தி,பலரது பாராட்டுகளை பெற்றுள்ளனர்.
சாரதாம்பாள் கோவில் சுவர் ஓவியம், என்.எஸ்.எஸ்., மாணவர்களின், 'சுவச்சதா ஹி சேவா' திட்டம் போன்ற கலைமுயற்சியால் ஈர்க்கப்பட்ட தெற்கு ரயில்வே நிர்வாகம், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, 'நிப்ட்-டீ' மாணவர்களுக்கான சிறப்பு திட்டத்தை வழங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கல்லுாரி மாணவ, மாணவியர், 'வந்தே பாரத்' கிராபிட்டி (Graffiti) ஓவியத்தை, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் உருவாக்கியுள்ளனர். துாய்மை, ஒற்றுமை, அகிம்சை ஆகிய காந்தியடிகளின் சிந்தனையையும், இந்தியாவின் முன்னேற்ற சின்னமாகிய 'வந்தே பாரத்' ரயிலையும் இணைத்து ஓவியம்உருவாகியுள்ளது.
கோட்ட அளவிலான ரயில் பயணிகள் கமிட்டியின் உறுப்பினர் சுரேஷ், ரயில்நிலைய துணை மேலாளர் கிருஷ்ண நந்தன் பண்டிட், நிப்ட் - டீ கல்லுாரி பொதுசெயலாளர் விஜயகுமார், கல்லுாரி ஆயத்த ஆடை பேஷன் டிசைன் துறை பேராசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஓவியம் பயணிகள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு வரும் பயணிகள், 'கிராபிட்டி' ஓவியத்தால் ஈர்க்கப்பட்டு, பாராட்டி வருகின்றனர். ஓவியம் முன்பு நின்று,'செல்பி' எடுத்தும் பொதுமக்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.
கல்லுாரி நிர்வாகிகள் கூறுகையில், 'காந்தியின் துாய்மை மற்றும் ஒற்றுமை நோக்கை காப்போம் - இணைந்து செயல்படுவோம்; தெற்கு ரயில்வே மென்மேலும் துாய்மையாகவும், பசுமையாகவும் மாறும்' என்ற சிந்தனையுடன், 'கிராபிட்டி' ஓவியம் வரையப்பட்டது.
நிப்ட் - டீ கல்லுாரியின் சமூக பணியை மக்கள் அறியும் வாய்ப்பாகவும் மாறியுள்ளது' என்றனர்.