/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மினி பஸ்களில் மாணவர் தொங்கல் பயணம்!
/
மினி பஸ்களில் மாணவர் தொங்கல் பயணம்!
ADDED : ஜன 31, 2024 01:11 AM

திருப்பூர்:'பீக்ஹவர்ஸில்' டவுன் பஸ்களில் மட்டுமல்லாது, மினிபஸ்களிலும் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பயணிக்கின்றனர். ஆர்.டி.ஓ., அலுவலர், போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.
நேற்று, ஊத்துக்குளி - திருப்பூர் ரோட்டில் பயணித்த மினி பஸ் ஒன்றில், படிக்கட்டில், ஐந்து முதல் ஏழு மாணவர்கள் ஒருகையை பஸ்சில் பிடித்தபடியும், ஒரு காலை படிக்கட்டில் வைத்த படியும் பயணித்தனர். பாதி இத்தனைக்கும் பஸ் முன்புற படிக்கட்டு அருகே, பஸ்சுக்குள் இடமிருந்தது.
இது ஒருபுறம் இருக்க படிக்கட்டில் பயணிகள், மாணவர்கள் தொங்கினாலும் நடத்துனர்கள் கண்டு கொள்வதில்லை. 'படிக்கட்டில் நிற்காதே என நாங்கள் எத்தனை முறை சொல்வது' என நொந்து கொள்கின்றனர். கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆர்.டி.ஓ., அலுவலர்கள்,'கப்சிப்' என உள்ளனர்.
அதிகாரிகளுக்குதெரியுமா?
திருப்பூரில், ஊத்துக்குளி, செங்கப்பள்ளி, விஜயமங்கலம் 'டோல்கேட்' வரை திருப்பூர் மாவட்டம் பரந்து விரிந்துள்ளது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை கூட திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில், வட்டார போக்குவரத்து துறையினர் விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அபராதம் விதித்தாக தகவல்கள் இல்லை. இப்படியொரு ரோடு இருப்பதேஆர்.டி.ஓ.,க்களுக்கு தெரியாது என்றே பொதுமக்கள் கூறுகின்றனர்.