/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில்மாணவர் பாராளுமன்றம்
/
கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில்மாணவர் பாராளுமன்றம்
ADDED : ஜூலை 06, 2025 03:12 AM

திருப்பூர் : திருப்பூர், பெருமாநல்லுார் கே.எம்.சி., சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளியில், மாணவர் பாராளுமன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிப் பாராளுமன்றம் துவங்க, பள்ளி முதல்வர் மேற்பார்வையில் கணினி ஆய்வகத்தில் மாணவர்கள் அனைவரும் தங்கள் வேட்பாளருக்கு கணினி வழியாக ஓட்டு அளித்தனர்.
தேர்வு செய்யப்பட்ட பள்ளித் தலைமை மாணவன், மாணவி மற்றும் 18 வகை கல்வி சார் மன்றங்களின் செயலாளர்கள், நான்கு விளையாட்டு அணித்தலைவர்கள், ஒவ்வொரு வகுப்புக்கும், மாணவர் தலைவர் என பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாணவர்களுக்கு பதவியேற்பு விழா மற்றும் பள்ளியில் செயல்படும் கல்வி சார் மன்றங்கள் துவக்க விழா ஆகியன நடந்தது. விழாவுக்கு, பள்ளி தலைவர் சண்முகம், லோகநாயகி அம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர்.
பள்ளி தாளாளர் மனோகரன் பள்ளிப் பாராளுமன்றத்தில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி, அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். சிறப்பு விருந்தினராக ஊத்துக்குளி மின் வாரிய செயற் பொறியாளர் விஜய் ஈஸ்வரன் கலந்து கொண்டார்.
பள்ளி தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா, பள்ளி முதல்வர் தனலட்சுமி முரளிதரன், தலைமையாசிரியர் பிரேமலதா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.