ADDED : மே 17, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவில், மாணவர் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. 2024ல், 89.87 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்; நடப்பாண்டு இது, 3.51 சதவீதம் உயர்ந்து, 93.38 சதவீதமாகியுள்ளது.
கடந்தாண்டு, 94.76 சதவீத மாணவியர் தேர்ச்சி பெற்றனர். நடப்பாண்டு, 1.51 சதவீதம் உயர்ந்து, இது, 96.27 சதவீதமாகியுள்ளது. கடந்த, 2019 ல், 97.95 சதவீதம் தேர்ச்சி பெற்ற திருப்பூர் மாவட்ட மாணவர்கள், ஆறுஆண்டுகளுக்கு பின், 93.38 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த, 2024ல், மாணவர்களில், 1,490 பேரும், மாணவியரில், 811 பேரும் என, 2,301 பேர் தேர்ச்சி பெறவில்லை. நடப்பாண்டு மாணவர்களில், 966 பேரும், மாணவியரில், 554 பேரும் என, 1,520 பேர் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.