UPDATED : அக் 26, 2026 07:56 PM
ADDED : அக் 26, 2026 07:54 PM

அனுப்பர்பாளையம்: திருப்பூர், சாமுண்டிபுரம், செல்லம்மாள் காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. இதையடுத்து, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம், மேலாண்மைக் குழு, ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ரூ.4 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்தனர். இதில் ஆசிரியர்கள், பொதுமக்கள் தலா ரூ.50 ஆயிரம் வழங்கியுள்ளனர். மீதித் தொகையை மற்ற தரப்பினர் வழங்க உறுதியளித்துள்ளனர்.
இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. எம்.எல்.ஏ., பாலமுருகன் பணிகளைத் தொடங்கி வைத்தார். கல்வித்துறை அதிகாரிகள், கவுன்சிலர் நாகராஜ், தலைமை ஆசிரியர் நாகராஜ் தினேஷ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிச்சாமி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பாண்டிமீனா மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
பள்ளிச் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. எம்.எல்.ஏ. பாலமுருகன் துவங்கிவைத்தார்.
